கல்முனை
கிழக்கு மாகாணத்தில் நகரின் மேற்கே இரண்டு மையில் தொலைவில் அமைந்த சேனைக்குடியிருப்பு கிராமத்தில் 1928.05.01 ந் திகதி திரு. று.ளு. செல்லையா அவர்களை தலைமை ஆசிரியராகக் கொண்டு இரண்டு ஆசிரியர்களையும் 19 மாணவர்களையும் கொண்டு தமிழ்க்கழகம் பாடசாலை என்ற பெயருடன் இயற்கி வந்தது.. தொடர்ந்து படிப்படியாக பல வளர்ச்சிகளை; கண்டு 1993 இல் திரு. யு அழகையா அதிபர் அவர்களின் அயராத உழைப்பினால் 1ஊ பாடசாலையாக வளர்ச்சி அடைந்தது. அவரின் பின் பல அதிபர்களினதும் சேவை காலத்தில் பல வகையான முன்னேற்றங்களைக் கண்டு கொண்டது. புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தரத்தில் பல திறமைச் சித்திகள்,உயர்தரத்தில் சித்தி பெற்று கல்வியல் கல்லூரி, பல்கலைக்கழக அனுமதிகள் பல மாணவவர்களுக்கு கிடைத்;தது. அதுமட்டுமன்றி பல வகையான இணைப்பாடவிதான செசற்பாடுகள்pலும் மாணவர்கள்; தங்களது திறமைகளை வெளிக்காட்டினர். தற்போது அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் திரு P. கமலநாதன் அதிபரின் சேவைக்காலத்தில் பல வகையான சாதனைகளையும் வெற்றிகளையும் கண்டு கொண்டது. இப்பாடசாலை இவரது சேவைக்காலத்;தில் பாடசாலைகளுக்கு முன்மாதிரியான செயற்பாடாக பாடசாலை கீதத்தினை இறுவட்டாக வெளியி;ட்டு எல்லா பாடசாலைகளுக்கும் முன்மாதிரியான பாடசாலையாகத் திகழ்ந்தது. மேலும் அவரது வழிகாட்டலின் கீழ்; இப்பாடசாலையின் நூலகமானது வருடாவருடம் தேசிய விருதில் 1ம் இடம் பெற்றுக்கொண்டிருப்பதும் தேசிய மட்டத்தில் இசை, நாடகப் போட்டியில் 2ம் இடம் பெற்றுக் கொண்டிருப்பதும், மாகாண மட்டத்தில் எறிபந்து விளையாட்டில் 3ம் இடம் பெற்றுக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையிலும், சாதாரணதர மற்றும உயர்தர பரீட்சையிலும் சித்தி பெற்று கல்வியற்கல்லூரி, பல்கலைக்கழகத்திற்கு சென்று கொண்டிருக்கும் மாணவர் தொகை அதிகரித்தது என கல்முனை வலயத்தில் சிறந்த இடத்தை பெற்றுக் கொண்டிருப்பதும் தமிழ்மொழித்தினம் , ஆங்கிலதின போட்டி, விஞ்ஞான போட்டி, மெய்வல்லுனர் போட்டிகள் என பல வவையான போட்டிகளிலும் தங்களது திறமைகளை வெளிக்காட்டி வரும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுகக்கும் , அதிபருக்கும் மட்டுமன்றி பாடசாலைகளுக்கு மத்தியிலும் முன்மாதிரியான பாடசாலையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. இத்தனைக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தவர் தற்போதைய அதிபர் ஆவார்.
எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுத்து வாழக்கூடிய மாணவர் சமுதாயம்.
தேசிய கல்வி நோக்கங்களோடு கூடிய தரமான கல்வியை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் மனித மேம்பாட்டிற்குரிய தேர்ச்சிமிக்க விளைதிறனும் வினைத்திறனும் உடையதாக இளைய சமுதாயம் உருவாகும்.