மாணவர் ஒழுக்கக் கோவை STUDENT DISCIPLINE CODES
1. கமு/கமு/கணேஷ மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் பாடசாலையை நேசிக்க வேண்டும்.
2.ஒவ்வொரு மாணவரும் தமது "நான் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூல கல்வி போதிக்கும் முன்னோடி பாடசாலையின் மாணவர்" என்ற உணர்வும், சிந்தனையும் எப்போதும் உங்கள் மனதில் இருத்தல் அவசியமாகும்.
3. ஒவ்வொரு மாணவரும் தினமும் பாடசாலைக்கு கிரமமாக சமுகமளித்தல் வேண்டும்.
4. தினமும் காலை மு.ப 7.15 க்கு முன்னர் வகுப்பறைக்குள் சமுகமளிக்க வேண்டப்படுவதோடு 7.25 மணிக்கு காலைக் கூட்டத்திற்காக உரிய இடங்களில் வரிசையாக நிற்றல் வேண்டும்
5. வெள்ளை நிறச் சட்டை - கொலர் வைத்து இடுப்பின் மடிப்புக்களின் அகலம் 2 அங்குலம், நீளம் முழங்காலிலிருந்து 3 அங்குலம் கீழாகவும் தைத்திருத்தல் வேண்டும். வெள்ளை நிறச் காற்சட்டை இறுக்கமாக இல்லாது தளர்வாக இருப்பதுடன் காற்சட்டையின் அடி விட்டம் 5 அங்குலமாகவும் இருத்தல் வேண்டும். மாணவர்கள் கழுத்துப்பட்டி அணிந்திருத்தல் வேண்டும். கறுப்பு நிறப் பாதணியும், காலுறையும் தினமும் சுத்தம் செய்து அணிதல் வேண்டும். ஆண்கள் முழுமையான சவரம் (மீசை,தாடி இல்லாமல்) செய்து தலைமுடி பாடசாலை மாணவருக்கு பொருத்தமான முறையில் அமைந்திருத்தல் வேண்டும். பெண்கள் தலைமுடியை இரண்டாகப் பிரித்துப் பின்னி, இரண்டாக மடித்து கறுப்பு ரிபனால் கட்ட வேண்டும். உள்ளாடைகள் மேன்மையானதாகவும், தூய்மையானதாகவும் அணிந்திருத்தல் வேண்டும்.
6. முன் அனுமதியின்றி பாடசாலைக்கு வருகை தராதவிடத்து பெற்றோரின் கையொப்பமிட்ட காரணமடங்கிய கடிதத்தினை வகுப்பாசிரியரிடம் ஒப்படைத்தல் வேண்டும்.
7.மாணவர்கள் மோதிரம், சங்கிலி, கைப்பட்டிகள், தாயத்துக்கள், நூல்கள் அணிவது பாடசாலை வளாகத்துக்குள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. விஷேட அனுமதியின் பேரில் தாயத்துக்கள், நூல்கள் அணியலாம்
8. மாணவர்களின் ஆடை விரல் நகங்கள், சப்பாத்து போன்றவை தினமும் தூய்மையாகவும் நேர்த்தியுடனும் இருக்க வேண்டும்.
9. வகுப்பறையினை விட்டு மாணவர்கள் வெளியே செல்லும் போது exit அட்டையினை கொண்டு செல்லுதல் வேண்டும். அட்டவணையின்படி பாடப்புத்தகங்கள், அப்பியாச
10.பாடசாலைக்கு வரும் பொழுது பாட கொப்பிகள், கற்றல் உபகரணங்கள் கொண்டு வருதல் வேண்டும்.
11.வகுப்பாசிரியர், பாட ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள், வகுப்பு தலைவர்கள் ஆகியோருடன் மிகவும் பண்பாகவும் ஒழுக்கத்துடனும் நடந்து கொள்வதோடு இவர்கள் பணிக்கும் வேலைகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.
12.பொது நிகழ்வுகளில் பாடசாலைக்கு களங்கம் ஏற்படுத்தும் எந்தவொரு மாணவியினதும் நடத்தைக்கு எதிராக கடுமையாக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக பொது இடங்களில் பிரயாணம் செய்தல் ஏதேனும் பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளுதல் போன்ற சந்தர்ப்பங்களில் கௌரவமாக நடந்து கொள்ளல் வேண்டும்.
13. பாடசாலை வளாகத்திலோ அதற்கு வெளியிலோ போதைப் பொருள் பாவனை முறைகேடான நடத்தைகளில் ஈடுபடல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. மீறி கண்டுப்பிடிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டணையாக பாடசாலையில் இருந்து விலக்கப்படுவீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
14. நீங்கள் அருந்தும் நீர், குளிர்பான வகைகளை வீட்டிலிருந்து கொண்டுவரல் வேண்டும், அல்லது பாடசாலை சிற்றுண்டிச் சாலையில் பெற்றுக் கொள்ள வேண்டும். பாதையோரக் கடைகளில், தெரு வியாபாரிகளிடம் உணவுகளைப் பெற்றுக் கொள்வது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது இது, தம்மையும் தம்மைச் சார்ந்தவரையும் சுகாதார பழக்க வழக்கங்களோடு இருப்பதற்கு உதவியாய் அமையும்.
15. மாணவர்கள் வீட்டில் ஒழுங்கானதோர் நேர அட்டவணையில் கற்கிறார்களா என பெற்றோர்களால் அவதானிக்கப்படல் வேண்டும்.
16. பாடசாலையில் ஒவ்வொரு பாடவேளை தொடக்கத்திலும் குறித்த இடத்தில் அன்றைய திகதி இடம்பெற்றிருத்தல் வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகளில் கவனயீனமாக இருக்கிறார்கள் என பெற்றோர்கள் கருதினால் பாடசாலை நிர்வாகத்தினரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.
17. தரம் 10 மாணவர்களுக்கான தொழில் நுட்ப பாடங்களை மாணவர்கள் தெரிவு செய்கையில் பெற்றோருடன் கலந்துரையாடி தெரிவு செய்தல் வேண்டும். தீர்மானத்தின் பின்னர் கோரிக்கைவிடும் எச்சந்தர்ப்பத்திலும் பாடங்கள் மாற்றித் தரப்படமாட்டாது என்பதை மனதிற் கொள்க.
18.மாணவர்கள் தொடர்பான விசாரணை முதலில் பிரிவுத் தலைவர்கள் அல்லது பிரதி அதிபர்கள் ஊடாக மேற்கொள்ளப்படும். தேவையான சந்தர்ப்பத்தில் வகுப்பாசிரியரை அல்லது ஆசிரியரை பின்னர் சந்திக்கலாம். பாட
19. பாடசாலை நேரத்தில் மாணவர்கள் எந்தவொரு தருணத்திலும் அனுமதி இல்லாமல் வெளியேறவோ உள்வரவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.
20.பொதுப் பரீட்சையில் தோற்றுவதற்கு பாடசாலைக்கு 80% வரவினை கொண்டிருத்தல் வேண்டும். இது கண்டிப்பானதாகும்.
21.விளையாட்டு போட்டிகள் சாரணியர், கலை மன்ற நிகழ்வுகளுக்காக பாடசாலையை விட்டு வெளியேறும் போது பாடசாலை சார்பாக ஒழுக்கத்தினை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
22. பெற்றோர்கள் மாணவர்களின் தினவரவையும் பயிற்சி அப்பியாசக கொப்பிகளையும் பரிசீலனை செய்ய வேண்டும்.
23.கல்லூரி சுற்றுலா செல்ல விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்றிருத்தல் வேண்டும், வகுப்பாசிரியரின் வருகையின்றி சுற்றுலா செல்ல முடியாது. மேலும் புறக்கிருத்திய செயற்பாடு தொடர்பாக பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்றிருத்தல் வேண்டும்.
24. பாடசாலையிலோ அல்லது அதற்கு வெளியிலோ நடைபெறுகின்ற இணைப் பாடவிதான செயற்பாடுகளில் பங்கு பற்றும் மாணவர்கள் பாடசாலை சீருடை பொறுப்பாசிரியரினால் விதந்துரைக்கப்படுகின்ற ஆடைகளை அணிந்திருத்தல் அவசியமாகும்.
25. பாடசாலையின் கௌரவத்தையும் நற்பெயரையும், புனிதத்தையும் பாதுகாத்தல் ஒவ்வொரு மாணவரினதும் கடமையாகும். இவற்றுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மாணவர்கள் நடந்து கொண்டால் பாடசாலை ஒழுக்காற்று குழுவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க.
26. எந்த சந்தர்ப்பத்திலும் பாடசாலையின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களுக்கு சதம் விளைவிக்காது அவற்றை பாதுகாப்பது ஒவ்வொருவரதும் கடமையாகும்.
27. சகல மாணவர்களும் அதிபர், உப அதிபர், பிரதி அதிபர், பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு மதிப்பளித்தல் வேண்டும். 28. பாடசாலை உள்ளேயும் வெளியேயும் ஏனைய நேரங்களிலும் கமு/கமு/கணேஷ மகா வித்தியாலய மாணவர்களுக்குரிய பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களாகிய உங்கள் நடத்தைகளும் செயற்பாடுகளும் சொற்களும் மிகவும் பயனுள்ளதாக அமைதல் வேண்டும். நீங்கள் இப் பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்பது மனதில் கொள்ளப்பட வேண்டும்.
28. பாடசாலை உள்ளேயும் வெளியேயும் ஏனைய நேரங்களிலும் கமு/கமு/கணேஷ மகா வித்தியாலய மாணவர்களுக்குரிய பண்புகளுடன் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்களாகிய உங்கள் நடத்தைகளும் செயற்பாடுகளும் சொற்களும் மிகவும் பயனுள்ளதாக அமைதல் வேண்டும். நீங்கள் இப் பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்பது மனதில் கொள்ளப்பட வேண்டும்.
29. மாணவர்களாகிய உங்கள் சொற்களோ செய்கைகளோ பிறர் மனதை துன்புறுத்தாதவாறு அமைதல் வேண்டும். கமு/கமு/கணேச மகா வித்தியாலயத்திற்கு இழுக்கைத் தரும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
30.யாராவது ஒருவர் பயிற்சியில் கலந்து கொள்ள முடியாது எனின் அதற்கான காரணம் அடங்கிய கடிதத்தையயும் பொறுப்பாசிரியரிடம் கையளிக்க வேண்டும்.
31.எல்லா பயிற்சியாளர்களும் பயிற்சி முடிந்தவுடன் பாடசாலை சுற்றுச் சூழலிலிருந்து வெளியேறுவதுடன் எவ்வளவு விரைவாக வீடுகளை சென்றடைய முடியுமோ அவ்வளவு விரைவாக சென்றடைய வேண்டும்.
32.பாடசாலையின் மன்றம், கழகம், சங்கங்களில் அனைத்து மாணவர்களும் தங்களை ஈடுபடுத்தி தமது ஆளுமையினை விருத்தி செய்தல் வேண்டும். மேலும் இக்கழகங்களின் தலைவர்கள் தமது ஆண்டறிக்கையினை, திட்டங்களை அல்லது திட்டமிடலை அதிபரிடம் சமர்ப்பித்தல் வேண்டும். வாராந்த
33.இணைப்பாட விதான செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்கள் தமது மாதாந்த பரீட்சைகளில் சிறந்த முன்னேற்றத்தினை காட்டுதல் வேண்டும்.
34. மாணவர்கள் பாடசாலையின் விடுகைப் பத்திரம், நற்சான்றிதழ் பத்திரம் பெறுவதாயின் ஒரு கிழமைக்கு முன்பே அறிவிக்க வேண்டும்.
35. பாடசாலையின் சட்ட திட்டங்களை அனைத்து மாணவர்களும் நன்கு தெரிந்திருப்பதோடு பின்பற்றல் உங்கள் கடமையாகும்.
36. கமு/கமு/கணேச மகா வித்தியாலயத்தில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் உங்கள் பாடசாலை காலங்கள் முடிந்த பின்பும் பழைய மாணவர் சங்கத்தில் இணைந்து கொண்டு பாடசாலை வளர்ச்சிக்காகவும், அபிவிருத்திக்காகவும் உழைக்க உரித்துடையவர்களாவீர்கள். உங்கள் வளமான எதிர்காலத்திற்கு பாடசாலை எப்போதும் துணையாக இருக்கும்.
37. பாடசாலை வளாகத்தினுள் கைத்தொலைபேசி அதனுடன் தொடர்புடைய சாதனங்கள் வைத்திருத்தல், பாவித்தல் சுற்றுநிரூபத்திற்கு அமைய தண்டனைக்குரிய குற்றமாகும். இவை பறிமுதல் செய்யப்படுவதுடன் மீள வழங்கப்படமாட்டாது.
38. இடைவேளை தவிர்ந்த சந்தர்ப்பங்களில் சிற்றுண்டிச் சாலைக்குச் செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
39. பாட நேரங்களில் அல்லது தேவையின்றி வகுப்பறைக்கு வெளியே சோடிகளாக அல்லது கூட்டமாக செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும்.
40.வகுப்பறையிலிருந்து மாணவர்கள் பாடத்திற்கான வேறு இடங்களுக்குச் செல்லும் போது வரிசையில் செல்ல வேண்டும்





