இலங்கை பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்ட காலத்தில்  அதாவது 1860 காலப் பகுதியில் இலங்கையருக்கு கல்வி போதிக்கப்பட வேண்டும் என்ற இலங்கை மக்களின் கோரிக்கைக்கு அமைய ஆங்கில மொழிக் கல்வியில் இருந்து சுய பாசை மொழிக் கல்விக்கான அத்திவாரம் இடப்பட்ட வகையில் கிராமங்கள் தோறும் பாடசாலைகளை அமைப்பதில் ஏற்பட்ட மறுமலர்சியின் விளைவால், 1880ம் ஆண்டளவில் சேனைக்குடியிருப்பு கிராமத்தில் சிறிய ஒரு ஓலைக் கொட்டிலில் ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அப் பாடசாலையில் வயது அடிப்படையில் முதலில் ஐந்து மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.